துறையூர் போக்சோ குற்றவாளி மீது பாய்ந்த குண்டாஸ்

துறையூர் அருகே நாகமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் பெருமாள், மேட்டங்காடு பகுதியில் சிறுமியை கத்தி முனையில் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அவரது தாயார் அளித்த புகாரின் பேரில், முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், அவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.