துறையூர் அருகே அம்மாபட்டியைச் சேர்ந்த செல்வகுமார், மங்களாபுரம் பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்திற்குச் சென்றபோது, அருகில் இருந்த வீட்டில் இருந்த நாய் அவரைத் துரத்தியது. இதனால் பயந்து வேகமாக ஓடிய அவர், தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்தார். தகவல் அறிந்த துறையூர் தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு செல்வகுமாரை மீட்டனர். சிறிய காயமடைந்த அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.