திருச்சி காஜாமலை பகுதியில் முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டியில் 59 பேர் காயமடைந்தனர். கரூர் மாவட்டம் ஆர்டிமலை அழகாபுரத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் இளையராஜா, ஜல்லிக்கட்டு காளை முட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.