திருச்சி: 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. 2 பேர் கைது

950பார்த்தது
திருச்சி: 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. 2 பேர் கைது
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே கடியாகுறிச்சி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (19), அல்லூர் மேலபச்சேரியைச் சேர்ந்த விவேக் (21) மற்றும் 2 சிறுவர்கள் சேர்ந்து 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மாணவி தனது தாயிடம் தெரிவித்ததை அடுத்து, ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரன், விவேக் ஆகியோரைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 2 சிறுவர்களைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி