தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோமரசம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வங்கிப் பணியாளர்கள் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி, வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்வு வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில் நடைபெற்றது.