திருச்சி: கோவிலுக்கு வந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

1077பார்த்தது
திருச்சி: கோவிலுக்கு வந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வலையமாதேவி பகுதியைச் சேர்ந்த கண்ணம்மாள் (62) என்பவர் தனது உறவினர் லட்சுமியுடன் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவிலுக்கு வந்துள்ளார். அம்மனை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தபோது, கண்ணம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, சங்கிலியைத் திருடிச் சென்ற மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி