திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.