திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் நெய்குளத்தைச் சேர்ந்தவர் ஆரோக்யா தாஸ் இவர் நேற்று திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் விண்நகர் அருகே தனது டூவீலரில் கடக்க முயன்றார் அப்போது திருச்சியில் இருந்து திருவரம்பூர் நோக்கி வந்த தனியார் பள்ளி பேருந்து அவர் மீது மோதியது இதில் பலத்த காயமடைந்த ஆரோக்கியதாஸ் அப்பகுதியில் இருந்தவர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிர் இழந்துவிட்டதாக கூறியுள்ளனர் இது குறித்து திருவரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.