திருச்சி ஏர்போர்ட் அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்த சேகர் (47) என்பவர், மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட வயிற்று வலியால் விரக்தியடைந்து வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.