திருச்சி: 5லட்சம் திருடிய வேலைக்கார பெண்ணுக்கு ஓராண்டு சிறை

திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் பாபுவின் இருசக்கர வாகனத்தில் 2023 ஆம் ஆண்டு வைத்திருந்த ₹3.65 லட்சம் ரொக்கம் திருடு போனது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், சந்தேகத்தின் அடிப்படையில் அவரது வீட்டில் வேலைக்காரப் பெண்ணாகப் பணிபுரிந்த எடமலைப்பட்டி புதூர் சேர்ந்த திலகாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பணத்தைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முகமது சுகைல், திலகாவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ₹2,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்டத் தவறினால் மேலும் இரண்டு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்.