திருச்சி: அறிவு சார் மையத்தில் அமைச்சர் நேரு திடீர் ஆய்வு

54பார்த்தது
திருச்சி: அறிவு சார் மையத்தில் அமைச்சர் நேரு திடீர் ஆய்வு
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 4, வார்டு எண் 53, குதுப்பப்பள்ளம் பகுதியில் நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில் சுமார் 200 மாணவர்கள் அரசு போட்டி தேர்வுக்கு பயின்று வருகிறார்கள். இம்மையத்தை மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு. கே. என். நேரு அவர்கள் இன்று தீடீர் ஆய்வு மேற்கொண்டு அவர்களின் மாணவர்கள், மாணவிகளின் வருகை பதிவேடு ஆய்வு செய்து அவர்கள் எந்தெந்த பகுதியில் இருந்து வருகிறார்கள் என்று கேட்டறிந்தார். மாணவர்கள், மாணவிகள் மற்றும் அறிவு சார் மையத்திற்கு தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். 

மேலும் அங்கு பயின்று வரும் மாணவர்களுக்கு, மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த ஆய்வின் போது மாண்புமிகு மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் திரு. வே. சரவணன் இ.ஆ.ப., நகரப் பொறியாளர் திரு. பி. சிவபாதம், மண்டல தலைவர் திருமதி. துர்கா தேவி, உதவி ஆணையர் திரு சண்முகம், மாமன்ற உறுப்பினர் திருமதி. கலைச்செல்வி, திரு. முத்துசெல்வம், திரு புஷ்பராஜ், திரு. ராமதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி