திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் துப்புரவுப் பணியாளர்களால் சேகரிக்கப்படும் குப்பைகள் திறந்தவெளி வாகனங்களில் கொண்டு செல்லப்படுவதால், சாலையில் பறக்கும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் தூசிகள் வாகன ஓட்டிகளின் கண்களில் விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், குப்பைகளில் இருந்து பரவும் துர்நாற்றம் நோய்த் தொற்று அபாயத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, குப்பைகளை வலைகள் கொண்டு மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.