நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு இன்று (25.02.2026) திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூபாய் 4.75 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பல்நோக்கு கட்டிடங்கள் மற்றும் புதிய ரேஷன் கடை கட்டிடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும், புதிய சமுதாயக்கூடத்திற்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.