திருச்சி நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் 14 புதிய கிளைகள் திறப்பு

65பார்த்தது
திருச்சி நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் 14 புதிய கிளைகள் திறப்பு
நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் திருச்சியில் அதன் ஒருங்கிணைந்த டயக்னாஸ்டிக்ஸ் மையத்தையும் மற்றும் 14 புதிய கிளைகளையும் திறந்து வைத்தது. நியூபெர்க் மேக்னம் – பெண் சுகாதார பணியாளர்களுக்காக "வுமன் ஹெல்த் கார்டு" திட்டம் – திருச்சியில் தொடக்கம். மருத்துவ டயக்னோஸ்டிக்ஸ் துறையில் முன்னணியில் இருக்கும் நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ், மேக்னம் இமேஜிங் & டயக்னாஸ்டிக்ஸுடன் கூட்டாக, திருச்சியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நோயறிதல் மற்றும் இமேஜிங் மையமான நியூபெர்க் மேக்னத்தை தொடங்கி இருப்பதை பெருமையுடன் அறிவிக்கிறது. 

இந்த இணை முயற்சி, திருச்சி மக்களுக்கு விரிவான, நவீன மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சுகாதார சேவைகளை வழங்கும். நியூபெர்க் மேக்னம் விழாவிற்கு திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் அவர்கள் தலைமையேற்றினார். அவர் திருச்சியில் ஒருங்கிணைந்த டயக்னாஸ்டிக்ஸ் மையத்தையும் மற்றும் 14 புதிய கிளை மையங்களையும் மெய்நிகராக (வர்ச்சுவல்) திறந்து வைத்தார். இந்த கிளைகள் கே.கே. நகர், புதுக்கோட்டை, டிவிஎஸ் டோல் கேட், பேரம்பலூர், அரியலூர், துறையூர், திருவண்ணாமலை, ராமலிங்கம் நகர், தில்லைநகர், மணப்பாறை மற்றும் ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் திறக்கப்பட்டு, மக்கள் மிக எளிதாக தரமான டயக்னாஸ்டிக் சேவைகளைப் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி