நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தனது பிறந்தநாளான நவம்பர் 9 அன்று திருச்சியில் இருக்க மாட்டேன் என்றும், அன்றைய தினம் யாரும் தனது அலுவலகத்திற்கோ வீட்டிற்கோ வர வேண்டாம் என்றும் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், தனது பிறந்தநாளை முன்னிட்டு எந்த நிகழ்ச்சியும் நடத்த வேண்டாம் என்றும் அவர் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.