திருச்சி போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

0பார்த்தது
திருச்சி போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை
திருச்சி: மணப்பாறை அருகே வையம்பட்டி காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த எழில் (25) என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. நீதிபதி சண்முகப்பிரியா, குற்றவாளி எழிலுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். சிறுமி வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள பருத்தி ஆலையில் பணிபுரிந்து வந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி