திருச்சி ஆர்சி பள்ளி மற்றும் கல்யாணி கவரிங் பேருந்து நிறுத்தப் பகுதிகளில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்துகள் ஹாரன் அடித்ததாகவும், கார் மீது இடித்ததாகவும் கூறி, ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரைத் தாக்கியுள்ளனர். இதனால், தொடர்ந்து அரங்கேறி வரும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, 230-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இன்று காலை முதல் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடம் அவசரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.