திருச்சி ஆர்ப்பாட்டம்; 82 பாஜகவினர் மீது வழக்கு

75பார்த்தது
திருச்சி ஆர்ப்பாட்டம்; 82 பாஜகவினர் மீது வழக்கு
டாஸ்மார்க் முறைகேட்டை கண்டித்து சென்னை டாஸ்மார்க் தலைமை அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து பாஜக முக்கிய தலைவர்கள் ஆன எச். ராஜா, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். இதைக் கண்டித்து திருச்சி வழிவிடு வேல்முருகன் கோவில் அருகே திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ஒண்டிமுத்து தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 82 பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி