திருச்சி: பெட்ரோல் பங்கில் ரூ. 26 ஆயிரம் பணம் கொள்ளை

4பார்த்தது
திருச்சி: பெட்ரோல் பங்கில் ரூ. 26 ஆயிரம் பணம் கொள்ளை
திருச்சி, பிராட்டியூர் தீரன் நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் மேலாளராக பணிபுரியும் பெரியார் செல்வன் (40) என்பவரிடம் இருந்து ரூ. 26,298 பணம் அடங்கிய பை நேற்று முன்தினம் திருடப்பட்டுள்ளது. பெட்ரோல் நிரப்ப வந்த இரு மர்ம நபர்கள், ஊழியர் கவனத்தை திசை திருப்பி பணப்பையை திருடிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.