சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளால், ராமேசுவரம் - சென்னை எழும்பூர் இடையிலான சேது அதிவிரைவு ரயில் (22662) வரும் பிப்ரவரி 19 முதல் ஏப்ரல் 5 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல், சென்னை எழும்பூர் - ராமேசுவரம் சேது அதிவிரைவு ரயில் (22661) பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 6 வரை தாம்பரத்திலிருந்து புறப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.