திருச்சி கிழக்கு தொகுதியில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் விஜய், அதிமுகவை மறைமுகமாக சாடினார். எப்போதும் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டிஎன்று கூறினார். திமுகவும் மற்றும் சிலரும் சேர்ந்து கொண்டு அடித்த கூத்தை நாடு பார்த்தாக கூறினார். மேலும், சட்டசபை நிகழ்வுகளை பலரும் தற்போது ஆவலுடன் பார்ப்பதாக கூறினார்.தற்குறி என்று உங்களால் சொல்லப்பட்டவர்கள் தான் இன்று உங்களை கேள்விக்குறி ஆக்கியுள்ளார்கள் என்று கூறினார். திமுக இப்படி ஆனதுக்கு காரணம் என்னவென்று உங்கள் குடும்பத்துக்குள் சென்று கேளுங்கள் என்று மக்கள் சொல்வதாக விஜய் குறிப்பிட்டார்.