திருச்சி: கரும்பில் அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு பயிற்சி

61பார்த்தது
திருச்சி: கரும்பில் அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி மாவட்டம் சிறுமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் சார்ந்த பயிற்சிகள் நவீன தொழில்நுட்பங்கள் செயல்முறை விளக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

அதன்படி மேலப்பட்டி கிராமத்தில் இஐடி பாரி நிறுவனத்துடன் இணைந்து பயிற்சி நடத்தப்பட்டது. சிறுமணி வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜா பாபு தற்போது விவசாயிகள் சந்திக்கும் சிரமங்களையும் அவற்றை தவிர்க்கும் வழிமுறைகளையும் விளக்கி கூறினார்.

தொடர்புடைய செய்தி