மகாராஷ்டிராவில் நடைபெற்ற பதினோராவது தேசிய அளவிலான ஏரோஸ் கோட்டோபால் ஸ்கேட்டிங் போட்டியில் 12 மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் தமிழக வீரர் வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றனர். பிப்ரவரி 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற தமிழக அணி, கோப்பையுடன் விமானம் மூலம் திருச்சிக்கு திரும்பியபோது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.