திருச்சி கல்லுக்குழி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு புகையிலை பொருட்கள் விற்ற அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.