திருச்சியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை.. 2 பேர் கைது

61பார்த்தது
திருச்சியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை.. 2 பேர் கைது
திருச்சி, மத்திய பஸ் நிலையம் அருகே கள்ளச் சந்தையில் டாஸ்மாக் மதுபான கடையை மூடிய பின் மது விற்பனை நடப்பதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். பின்னர் அங்கு தனியார் ஹோட்டல் அருகே நின்றவர்களிடம் சந்தேகத்தின் அடிப்படையில் கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். 

இதில் உறையூர், தெற்கு மாதுளங்கொல்லை தெருவைச் சேர்ந்த ரமேஷ் (வயது 55) மற்றும் திருச்சியை அடுத்த மணப்பாறை, வையம்பட்டியைச் சேர்ந்த செல்லதுரை (வயது 55) ஆகியோர், அங்கு கள்ளத்தனமாக மது விற்றதாக தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 92 மது பாட்டில்கள், 2 பீர் பாட்டில்கள் மற்றும் ரூ.35,480 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you