துறையூர் அருகே பி. மேட்டூரைச் சேர்ந்த பிரபுவின் மனைவி கனிஷ்கா, இன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். கணவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. உறவினர்கள் அவரை துறையூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கனிஷ்காவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.