திருச்சி: கிணற்றில் தவித்த பெண் பத்திரமாக மீட்பு

53பார்த்தது
திருச்சி: கிணற்றில் தவித்த பெண் பத்திரமாக மீட்பு
திருச்சி அருகே உள்ள ஆவூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராயப்பன். இவரது மகள் யுவாஞ்சலி (27) சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இந்த நிலையில் நேற்று (மார்ச் 12) தடுப்புக் கட்டை ஏதும் இல்லாமல் இருந்த ஊர் பொது கிணற்றில் யுவாஞ்சலி கால் தவறி விழுந்து விட்டார். 

அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் உடனே நவல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறப்பு நிலைய அலுவலர் ஆர்தர் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழுவினர் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிய யுவாஞ்சலியை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

தொடர்புடைய செய்தி