திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே கருத்தமடை பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்) வேலை பிடிக்காததால் பல இடங்களில் தேடியும் சரியான வேலை கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.