துறையூர் அருகே லாரி மீது பைக் மோதி விபத்தில் இளைஞர் பலி

1190பார்த்தது
துறையூர் அருகே லாரி மீது பைக் மோதி விபத்தில் இளைஞர் பலி
துறையூர் அருகே கீழக்குன்னுபட்டி கிராமத்தைச் சேர்ந்த வினோத் (25) என்பவர் இன்று காலை பால் வியாபாரத்திற்காக இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கிழக்கு வாடி பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி