
திருச்சி: மோடி வருகையை கண்டித்து விவசாய சங்கங்கள் போராட்டம்.
திருச்சியில் விவசாய சங்கத் தலைவர்கள் அய்யாகண்ணு, தனபாலன், கள்ளு நல்லுசாமி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீரைத் திறந்துவிட வலியுறுத்தி, வரும் 19ஆம் தேதி கோவை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்த உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.





























