திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே ஊரணிபட்டி குடியிருப்பு பகுதியில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு கண்டெடுக்கப்பட்டது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பாம்பு பிடிப்பான் உதவியுடன் பாம்பை லாவகமாகப் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்தப் பாம்பை அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.