திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே மான்மாஞ்சான்பட்டி குடியிருப்பு பகுதியில் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இரை தேடி வந்ததாக அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற துவரங்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள், பாம்பு பிடிப்பான் உதவியுடன் சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகு பாம்பை லாவகமாகப் பிடித்து, அருகில் உள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவித்தனர்.