திருச்சி மாவட்டம் துரங்குறிச்சி அடுத்த பிடாரப்பட்டியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வரும் ருத்ராஜ் மாறனின் மனைவி காயத்ரி, வீட்டில் பீரோவைத் திறந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 18 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.