திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே முக்கன்குளம் மற்றும் சொக்கநாதன்பட்டி பகுதிகளில் குரங்குகள் பொதுமக்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் தொல்லை கொடுத்தன. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, வனத்துறை அதிகாரிகள் கூண்டுகளை அமைத்து குரங்குகளைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த முயற்சியில் சுமார் 28 குரங்குகள் கூண்டில் சிக்கின. இதையடுத்து, துவரங்குறிச்சி வனத்துறையினர் அந்த குரங்குகளை பாதுகாப்பாக அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.