திருச்சியில் இரண்டாம் நிலை காவலர் தேர்வு 3159 பேர் எழுதினர்

2பார்த்தது
திருச்சியில் இரண்டாம் நிலை காவலர் தேர்வு 3159 பேர் எழுதினர்
தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர்கள், சிறை அதிகாரிகள், தீயணைப்புத்துறை அலுவலர்கள் ஆகியோருக்கான தேர்வு திருச்சி மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. இத்தேர்விற்கு 3572 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 3159 பேர் தேர்வு எழுதினர். 413 பேர் தேர்வு எழுத வரவில்லை. சிறப்பு மேற்பார்வை அதிகாரியான மாநகர போலீஸ் கமிஷனர் காமினி நான்கு தேர்வு மையங்களிலும் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி