திருச்சி நவல்பட்டு காவல் நிலைய வழக்கில் தொடர்புடைய வசந்தகுமார் என்ற குற்றவாளி, மத்திய சிறையில் இருந்து திருச்சி சி ஜே எம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற பாதுகாப்பு முடிந்ததும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டபோது, அவரது மலக்குடலில் 12 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது சிறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வசந்தகுமார் மீது கஞ்சா மற்றும் சிறைச்சாலை சட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, இரண்டு எஸ்எஸ்ஐ, ஒரு பெண் போலீஸ், ஒரு ஏட்டு என நான்கு பேரை பணியிடை நீக்கம் செய்து கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.