திருச்சியில் வாலிபர் படுகொலை.. சில மணி நேரத்தில் 5 பேர் கைது

1585பார்த்தது
திருச்சியில் வாலிபர் படுகொலை.. சில மணி நேரத்தில் 5 பேர் கைது
திருச்சி பீமா நகரைச் சேர்ந்த தாமரைச்செல்வன், மார்சிங் பேட்டை அருகே ஐந்து பேர் கொண்ட கும்பலால் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த அவரை அந்த கும்பல் துரத்திச் சென்று கொலை செய்தது. இச்சம்பவம் தொடர்பாக சதீஷ், பிரபாகரன், நந்து, கணேசன் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் நடந்து சில மணி நேரத்திலேயே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி