திருச்சி பெட்டவாய்த்தலை ஆஞ்சநேயர் கோவில் அருகே அதிகாலை 2:30 மணியளவில் ஆட்டோ, இரண்டு பேஸஞ்சர் வேன், ஜல்லி லாரி மற்றும் பேருந்து என ஐந்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த நபர்கள் குளித்தலை அரசு மருத்துவமனை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து பெட்டவாய்த்தலை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.