திருச்சி மாவட்டத்தில் மணல் கடத்தல் நடைபெறுவதாக மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். சமயபுரம் டோல் பிளாசா அருகே பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், புத்தாநத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்னம்பட்டி பகுதியில் புவனேஸ்வரன், ஹரிஷ், ஜீயபுரம் காவல் கூடலூர் பகுதியில் தினேஷ், உத்தமர் கோவில் மேம்பாலம் அருகே விஜயேந்திரன், எழிலரசன், சந்திரன் என ஏழு பேர் மணல் கடத்தலில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து நான்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.