திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்ற 75 வயது மூதாட்டி கைது

1பார்த்தது
திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்ற 75 வயது மூதாட்டி கைது
திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், எ.புதூர் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில், ராம்ஜி நகர் மில் காலனி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த துளசி (75) என்ற மூதாட்டி கஞ்சா விற்றுக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 120 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி