திருச்சி மாவட்டம் பொன்னம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட உப்பிலியப்பட்டி பகுதியில் ரங்கசாமி என்பவரது குடியிருப்பு அருகே சுமார் 10 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு ஒன்று காணப்பட்டது. இதனைக் கண்ட பொதுமக்கள் துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், பாம்பு பிடிப்பான் உதவியுடன் சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகு அந்த சாரைப்பாம்பை லாவகமாகப் பிடித்தனர்.