திருச்சி மாநகராட்சியில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், ரூபாய் 60 கோடியில் காந்தி மார்க்கெட் மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படாதது மற்றும் காவிரி ஆற்றின் தென்கரையில் ரூபாய் 15 கோடியில் அழகுபடுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாதது ஆகியவற்றை கண்டித்து, திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி மற்றும் திருச்சி மாநகராட்சி அதிமுக கொறடா கவுன்சிலர் அரவிந்தன் ஆகியோர் பட்ஜெட் தாக்கலை எதிர்த்து வெளிநடப்பு செய்தனர்.