புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, யோகநாதனை அறிவித்தார். இதைத் தொடர்ந்து முசிறி கைகாட்டி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மேள தாளங்களுடன், வெடி வெடித்து, பொன்னாடை போர்த்தி, மாலைகள் அணிவித்து, இனிப்புகள் வழங்கி சிறப்பான வரவேற்பு அளித்தனர். மாவட்ட செயலாளர் யோகநாதன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.