மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டம் லால்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மார்ச் 25ஆம் தேதி வரை உளுந்து பயிர் கொள்முதல் செய்யப்பட உள்ளது. விவசாயிகள் இதற்கான முன்பதிவுக்கு சிட்டா, அடங்கல், ஆதார் நகல், வங்கிக் கணக்கு விவரங்களுடன் லால்குடி ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளரை (9489482122) தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.