கடந்த 2006 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள பெரியார் சிலையை சேதப்படுத்தியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் மீது ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக இன்று அர்ஜுன் சம்பத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.