மணப்பாறை அருகே மஞ்சம்பட்டியைச் சேர்ந்த அஜய் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை மணப்பாறை ரயில்வே ஸ்டேஷன் அருகே நிறுத்திவிட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வாகனம் காணாமல் போனது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், மணப்பாறை போலீசார் திருச்சி நாகமங்கலத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட பைக்கை பறிமுதல் செய்தனர்.