துவரங்குறிச்சி கார் மோதி விபத்தில் பைக்கில் சென்றவர் சாவு

1பார்த்தது
துவரங்குறிச்சி கார் மோதி விபத்தில் பைக்கில் சென்றவர் சாவு
மதுரை மாவட்டம் நாகமங்கலத்தைச் சேர்ந்த நிஜாமுதீன் என்பவர் சென்னையில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். நேற்று, அவர் தனது இருசக்கர வாகனத்தில் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு, சாலை ஓரம் விழுந்து தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.