திருச்சி மாவட்டம் துறையூர் அருகே காவேரிப்பட்டி கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், சக்தி கேந்திர பொறுப்பாளர் சரவணகுமார் கலந்துகொண்டு மத்திய பட்ஜெட் 2026 குறித்து விளக்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ராஜா, தொகுதி அமைப்பாளர் தனபால் மற்றும் பிற நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.