திருச்சி: மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு பார்வையற்றோர் போராட்டம்

56பார்த்தது
திருச்சி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று (மார்ச்.17) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது, பார்வையற்ற பள்ளி மாணவி மர்ம மரணத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுகுறித்து குழு அமைத்து விசாரணை செய்து அதன் உண்மை தன்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். 

எதிர்காலத்தில் பார்வைகுறைபாடுடைய மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி போன்றவற்றை மேம்படுத்த தேவையான தகுதி உடைய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் திரளான பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி