திருச்சியில் அமைச்சர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

2பார்த்தது
திருச்சியில் அமைச்சர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தில்லியில் கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சியில் உள்ள திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என். நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள புனித வளனார் கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி